ADDED : நவ 30, 2024 04:41 AM
திருப்பூர் : சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், இலவச சட்ட உதவி குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் விழுதுகள் தன்னார்வ அமைப்பு ஆகியன இணைந்து, இலவச சட்ட உதவி குறித்தும், சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தின.
திருமுருகன்பூண்டி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நடந்த முகாமில், விழுதுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். திட்ட மேலாளர் சந்திரா முன்னிலை வகித்தார்.
சட்டப் பணிகள் ஆணைக்குழு வக்கீல்கள் தமயந்தி, முத்துலட்சுமி ஆகியோர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்டப் பாதுகாப்பு மற்றும் சிறப்பு சட்டங்கள் குறித்தும், சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கினர். கள ஒருங்கிணைப் பாளர் சுதா நன்றி கூறினார்.