/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகள் இறப்புக்கு நீதி கிடைக்கும் வரை சட்டப்போராட்டம்: ரிதன்யா தந்தை
/
மகள் இறப்புக்கு நீதி கிடைக்கும் வரை சட்டப்போராட்டம்: ரிதன்யா தந்தை
மகள் இறப்புக்கு நீதி கிடைக்கும் வரை சட்டப்போராட்டம்: ரிதன்யா தந்தை
மகள் இறப்புக்கு நீதி கிடைக்கும் வரை சட்டப்போராட்டம்: ரிதன்யா தந்தை
ADDED : ஆக 23, 2025 12:31 AM
அவிநாசி: ''மகள் இறப்புக்கு நீதி கிடைக்கும்வரை சட்டப்போராட்டம் தொடரும்'' என்று தற்கொலை செய்துகொண்ட ரிதன்யாவின் தந்தை கூறினார்.
அவிநாசி கைகாட்டிப்புதுார் பகுதியை சேர்ந்த ரிதன்யா, 27, வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.
இதுதொடர்பாக, அவரது கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் கைதான மூவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கூறுகையில், ''ஜாமின் வழங்கியிருப்பது வருத்தம் தருகிறது. சட்டத்தை மதிக்கிறோம்; நம்புகிறோம்.
மகளின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் உள்ளோம். முதல்வருக்கு அளித்த புகாரின் அடிப்படையில் அதற்குரிய நடவடிக்கையை முதல்வர் எடுப்பார் என காத்திருக் கிறோம்.
இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது; போலீசார், நீதித்துறை மற்றும் அரசு உரிய விசாரணை மேற்கொண்டு எனது மகளின் இறப்பிற்கு நீதி வழங்க வேண்டும்.
நீதி கிடைக்கும் வரை சட்டப் போராட்டம் தொடரும்'' என்றார்.
உண்ணாவிரதம் இருக்க திட்டம்
ரிதன்யாவின் இல்லத்தில் அவரது பெற்றோர்களை சந்தித்து உலக ஹிந்து திருக்கோவில்கள் அமைப்பு நிறுவனத் தலைவர் சீனிவாசன் ஆறுதல் கூறினார்.
அவர் கூறுகையில், ''ரிதன்யாவின் மரணத்திற்கு காரணமான கணவர் குடும்பத்தினர் ஜாமினில் விடுவிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. மீண்டும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். உரிய விசாரணை செய்து ரிதன்யாவின் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் இதை வலியுறுத்தி எங்கள் அமைப்பின் சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம்' என்றார்.