/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தெருநாய்களை கட்டுப்படுத்த சட்டரீதியான கொள்கை முடிவு'
/
'தெருநாய்களை கட்டுப்படுத்த சட்டரீதியான கொள்கை முடிவு'
'தெருநாய்களை கட்டுப்படுத்த சட்டரீதியான கொள்கை முடிவு'
'தெருநாய்களை கட்டுப்படுத்த சட்டரீதியான கொள்கை முடிவு'
ADDED : மார் 23, 2025 11:29 PM
திருப்பூர் : பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
தெருநாய்கள், கால்நடைகளை தாக்கி, விவசாயிகளுக்கு மிகப்பெரிய வாழ்வாதார பிரச்னையை ஏற்படுத்தி வருகின்றன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, இழப்பீடு அறிவித்துள்ள முதல்வர் மற்றும் அமைச்சர் முத்துசாமிக்கு நன்றி.
இருப்பினும், சந்தை மதிப்பீட்டில் இருந்து, ஆடு, கோழிகளுக்கான இழப்பீடு மிகவும் குறைவாக இருக்கிறது. மீண்டும் பரிசீலித்து, சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்கினால் மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். பெருக்கமடைந்துள்ள தெருநாய்களை கட்டுப்படுத்த, தமிழக அரசு, சட்டரீதியாக கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், 200 பேர், ஈரோட்டில் அமைச்சர் முத்துச்சாமியை சந்தித்து, நன்றி தெரிவித்தனர்.