/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு
/
தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு
ADDED : ஜன 30, 2025 11:50 PM
திருப்பூர்: உலக தொழு நோய் தினத்தை முன்னிட்டு, சுகாதாரத்துறை சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொழு நோய் விழிப்புணர்வு உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் துவக்கிவைத்தார்.
'தொழுநோய், மைக்கோபாக்டீரியம் லெப்ரே என்கிற பாக்டீரியாவால் காற்றில் பரவுகிறது.
உணர்ச்சியற்ற தேமல், படை போன்ற தோல்நோய் உள்ளவர்களையோ அல்லது தொழுநோயினால் உடல் குறைபாடு உள்ளவர்களை கண்டால், அவர்களை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி மாணவியர் பங்கேற்று, 'தொழு நோய் பாதித்தவர்களை அன்பாகவும், மரியாதையாகவும் நடத்துவோம்; தொழுநோய் முற்றிலும் குணமாகக்கூடியது.
ஆரம்ப நிலை சிகிச்சை உடல் குறைபாட்டை ஏற்படுத்தாது. தொழு நோய் இல்லாத இந்தியா உருவாக இணைந்து செயல்படுவோம்,' என உறுதிமொழியேற்றனர்.
சுகாதாரத்துறை துணை இயக்குனர் (தொழுநோய்) வேலாயுதம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

