sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மத்தாப்'பூ'க்கள் மலரட்டும்

/

மத்தாப்'பூ'க்கள் மலரட்டும்

மத்தாப்'பூ'க்கள் மலரட்டும்

மத்தாப்'பூ'க்கள் மலரட்டும்


ADDED : அக் 17, 2025 11:54 PM

Google News

ADDED : அக் 17, 2025 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தீ பாவளி பண்டிகை என்றாலே பட்டாசு, வாணவேடிக்கை, மத்தாப்பு இல்லாமல் நிறைவு பெறுவதில்லை.

'பாதுகாப்புடன் பட்டாசு வெடிக்க வேண்டும்' என்று கூறும், திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ், 'தீயணைப்புத்துறையினர் பட்டாசு வெடிக்கும்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்' என்று தெரிவித்தார்.

செய்ய வேண்டியவை l பெரியவர்களின் கண்காணிப்பின் கீழ் தான் சிறுவர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும்.

l உயரத்தில் பறந்து சென்று வெடிக்கும் ராக்கெட் போன்ற வற்றை திறந்த வெளியில் மட்டுமே வெடிக்க வேண்டும்.

l பட்டாசை கொளுத்தியவுடன் சிறிது துாரம் விலகிச் சென்று நிற்க வேண்டும்.

l தரையில் வைத்து பற்ற வைக்கும் புஸ்வாணங்களை பாதுகாப்பாக பக்கவாட்டில் நின்று கொளுத்த வேண்டும்.

l புதிய ரக, பேன்ஸி ரக பட்டாசுகள் வெடிக்கும் முறை பற்றி அதன் உற்பத்தி நிறுவனங்களின் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும்.

l வீட்டின் அருகிலோ அல்லது சுற்றுப்புறத்திலோ பட்டாசு வெடிக்கும் போது வீட்டு ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி வைக்க வேண்டும்.

l வைக்கோல் போர், ஓலைக் கூரை வேய்ந்த வீடு, மரக்குவியல் போன்ற எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்கள் இல்லாத இடத்தில் வெடிக்க வேண்டும்.

l பட்டாசுகளை கையில் பிடித்து கொளுத்தி வீசி எறிந்து விளையாடக் கூடாது.

l ஈரமான பட்டாசுகளை அடுப்பின் அருகில் வைத்து உலர வைக்கக் கூடாது.

l முன்னெச்சரிக்கையாக, அருகில் ஒரு பக்கெட்டில், தண்ணீர் வைத்துக் கொண்டு பாதுகாப்பாக வெடிக்கவும்.

l எளிதில் தீப்பற்றக் கூடிய இடம் தீ அபாயம் மிக்க இடங்களில் வெடிக்கக் கூடாது.

செய்யக்கூடாதவை l பட்டாசை சட்டைப் பையில் வைக்காதீர்கள்.

l இரவு 10:00 மணிக்குமேல் பட்டாசு வெடிக்காதீர்கள்.

l வெடிகளை மிகவும் இறுக்கமான, டின்கள், பாட்டில்கள் போன்றவற்றில் வைத்து வெடிக்காதீர்கள்.

l எரிந்து அணைந்த மத்தாப்புகளை உடனே அகற்ற வேண்டும்.

l அணைந்த பட்டாசை அருகே சென்று பார்க்க கூடாது.

l பட்டாசுக்கு அருகே எரியும் ஊதுபத்தி, விளக்கு, மெழுகுவர்த்தி மற்றும் எளிதில் தீப்பற்றும் பொருட்களை வைக்க கூடாது.

l பைக், கார் போன்ற வாகனங்களை அருகே நிறுத்திவைக்க கூடாது.

l வாகன போக்குவரத்து மிகுந்த இடம், விலங்குகள், நோயாளி கள், குழந்தைகள் இருக்கும் வீடுகள் அருகில் வெடித்து இடையூறு செய்யக்கூடாது.

தொடர்பு கொள்ள...: தீயணைப்பு - மீட்பு பணிகள் நிலையத்தை 0421 247 2201 மற்றும் 94450 86320 எண்களிலும்:






      Dinamalar
      Follow us