/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இதயம், நுரையீரல் மீட்பு பயிற்சி
/
இதயம், நுரையீரல் மீட்பு பயிற்சி
ADDED : அக் 17, 2025 11:54 PM

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் இதயம் மற்றும் -நுரையீரல் மீட்புப் பயிற்சி வாரத்தை முன்னிட்டு, இதயம் மற்றும் --நுரையீரல் மீட்பு குறித்த செயல்முறை பயிற்சி வகுப்பு நடந்தது.
மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் துவக்கி வைத்தார். முன்னதாக, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சந்தோஷ் வரவேற்றார்.திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி, அவசர மருத்துவ சிகிச்சைத் துறை உதவி பேராசிரியர் ஜெயக்குமார் மற்றும் குழுவினர், பயிற்சி அளித்து, இதயத்தை காக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கினர்.
இதயம் திடீரென செயலிழந்தால், அதைக் கண்டறிவது, உடனடியாக வழங்க வேண்டிய முதலுதவி சிகிச்சை ஆகியன குறித்து விளக்கப்பட்டது. நீதிபதிகள், வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் பங்கேற்றனர்.