/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழந்தைகள் நல விடுதி பதிவு செய்தல் கட்டாயம்
/
குழந்தைகள் நல விடுதி பதிவு செய்தல் கட்டாயம்
ADDED : அக் 17, 2025 11:55 PM
திருப்பூர்: கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தில், 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தங்கியுள்ள அனைத்து பள்ளி விடுதிகளையும் பதிவு செய்வதற்கான ஒரு மாத காலக்கெடு முடிவடைந்துள்ளது. இதுவரை பதிவு செய்யாத நிறுவனங்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உடனடியாக விண்ணப்பிக்கவேண்டும்.
மன வளர்ச்சி குன்றியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், போதைக்கு அடிமையானோர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள், அந்தந்த துறைசார்ந்த அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும். தவறினால், மாவட்ட நிர்வாகம் வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்திலுள்ள பள்ளி விடுதிகள், குழந்தை இல்லங்கள், இதர விடுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக, மன ரீதியாக துன்புறுத்துதல் போன்ற குற்றங்கள் செய்வோர் மீது, இளைஞர் நீதி சட்டம் 2015 மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012ன் படி கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.