/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில இறகுப்பந்து போட்டி: பிரன்ட்லைன் பள்ளி அபாரம்
/
மாநில இறகுப்பந்து போட்டி: பிரன்ட்லைன் பள்ளி அபாரம்
மாநில இறகுப்பந்து போட்டி: பிரன்ட்லைன் பள்ளி அபாரம்
மாநில இறகுப்பந்து போட்டி: பிரன்ட்லைன் பள்ளி அபாரம்
ADDED : அக் 17, 2025 11:55 PM

திருப்பூர்: முதல்வர் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டி சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற திருப்பூர் தி பிரன்ட்லைன் பள்ளி மாணவ, மாணவியர் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றனர்.
மாணவர் இறகுப்பந்து இரட்டையர் பிரிவில் ரிபினேஷ், கிருத்திக் இறுதிப்போட்டியில் மதுரை அணியை 2-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்று, 1.5 லட்சம் ரூபாய் காசோலையை பரிசாக பெற்றனர்.
ஒற்றையர் பிரிவில் கவியுகன் மூன்றாமிடம் பெற்று 50 ஆயிரம் ரூபாய் காசோலையை பெற்றார். மாணவியர் இரட்டையர் பிரிவில் கிருத்தியா, சமீரா ஆகியோர் சிவகங்கை அணியை 2-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்று 1.5 லட்சம் ரூபாய் காசோலையைப் பெற்றனர்.
வெற்றி பெற்றோரையும், உடற்கல்வி ஆசிரியர் செந்திலையும் பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குனர் சக்தி நந்தன், இணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன், முதல்வர் வசந்தராஜ் ஆகியோர் பாராட்டினர்.