/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அறிவோம் அவனை... அவன் அன்பே நாம் பெறும் கருணை
/
அறிவோம் அவனை... அவன் அன்பே நாம் பெறும் கருணை
ADDED : ஜூன் 24, 2025 12:34 AM

திருப்பூர்; ஆனி மாத பிரதோஷமான நேற்று, திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது.
திங்கட்கிழமை வரும் பிரதோஷம் சோமவார பிரதோஷம் எனப்படுகிறது. அவ்வகையில், ஆனி மாதத்தில், நேற்று பிரதோஷ வழிபாடு, மாவட்டத்திலுள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பாக நடைபெற்றது.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், பிரதோஷ வழிபாடு நடந்தது. மாலை, 4:30 மணிக்கு, மூலவர் மற்றும் நந்தியெம்பெருமானுக்கு மகா அபிேஷகம், அலங்காரபூஜைகள் நடந்தது.
தொடர்ந்து, உமாமகேஸ்வரருக்கு மகா அபிேஷகம், அலங்காரபூஜைகள் நடந்தது. வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய உற்சவமூர்த்திகள், வெளிபிரகாரத்தை வலம் வந்து அருள்பாலித்தனர்.
அவிநாசிலிங்கேஸ்வர் கோவில், நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், அலகுமலை ஆதிகைலாசநாதர் கோவில், பெரியபாளையம் ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் உட்பட அனைத்து சிவாலயங்களில் நடந்த சோமவார பிரதோஷ பூஜையில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.