நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்:பொங்கலுார் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான 'இணைவோம் மகிழ்வோம்' நிகழ்ச்சி நடந்தது.
இதில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மாற்றுத்திறன் மாணவர்களுடன் அவர்களின் பெற்றோர்களும் பங்கேற்றனர்.
பள்ளி அளவில் நடந்த வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட திட்ட அலுவலர் சிவக்குமார் பரிசு வழங்கினார். என்.என்.,புதுார் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சாமியாத்தாள், பி.யூ.வி.என்., பள்ளி தலைமை ஆசிரியை நீலாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

