/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாசிப்பை நேசிப்போம் பள்ளியில் கருத்தரங்கம்
/
வாசிப்பை நேசிப்போம் பள்ளியில் கருத்தரங்கம்
ADDED : ஆக 29, 2025 09:54 PM
உடுமலை; , உடுமலை எஸ்.கே.பி., பள்ளியில், வாசிப்பை நேசிப்போம் கருத்தரங்கம் நடந்தது.
உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில், மாணவர்கள் புத்தகங்கள் வாசிப்பதை குறிக்கோளாகக்கொண்டு, 'வாசிப்பை நேசிப்போம்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கல்விக்கழகத்தின் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் பேசுகையில், ''மாணவர்கள் நுால்கள் வாசிப்பதால், வாழ்வில் பயனுள்ளதாக அமையும். நுால்களே மனிதனை பண்படுத்தும் மிகச்சிறந்த வழிகாட்டியாகும். எனவே, மாணவர்கள் பள்ளி, நுாலகம் மற்றும் அரசு நுாலகங்களில் பல்வேறு துறை சார்ந்துள்ள நுால்களை ஆர்வமாக படிப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்,'' என்றார்.
கல்விக் கழகத்தின் தலைவர் டாக்டர் மோகன் பிரசாத் சார்பில், நூல்களை மாணவர்களுக்கு வழங்கி வாசிப்பை நேசிக்கும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு, புத்தக பயிற்சியின் முக்கியத்துவம் போதிக்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் நாராயணன் நன்றி கூறினார்.

