/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'திருப்பரங்குன்றத்தில் சந்திப்போம்' : ஹிந்து முன்னணி அறிவிப்பு
/
'திருப்பரங்குன்றத்தில் சந்திப்போம்' : ஹிந்து முன்னணி அறிவிப்பு
'திருப்பரங்குன்றத்தில் சந்திப்போம்' : ஹிந்து முன்னணி அறிவிப்பு
'திருப்பரங்குன்றத்தில் சந்திப்போம்' : ஹிந்து முன்னணி அறிவிப்பு
ADDED : ஜன 23, 2025 11:53 PM

திருப்பூர்: திருப்பூரில், ஹிந்து முன்னணியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.
திருப்பூர் மாநகர் மாவட்டம் ஹிந்து முன்னணி சார்பில், மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில பொது செயலாளர் கிஷோர்குமார், மாநில செயலாளர் செந்தில்குமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் அடுத்த ஒரு ஆண்டுக்குள் ஒவ்வொரு பகுதியில் இருந்தும், 400 பேரை அமைப்பில் இணைப்பது, திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கும் வகையில் வரும் பிப்., 4ம் தேதி 'திருப்பரங்குன்றத்தில் சந்திப்போம்; முருகனை தரிசிப்போம்' என்ற தலைப்பில் போராடுவது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.