/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நுாலகத்துறை பேச்சு போட்டி; மாணவர்களே தயார்தானே!
/
நுாலகத்துறை பேச்சு போட்டி; மாணவர்களே தயார்தானே!
ADDED : டிச 18, 2024 11:11 PM
திருப்பூர்; கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, பொது நுாலகத்துறை சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
திருப்பூரில், பார்க் ரோட்டிலுள்ள மாவட்ட மைய நுாலகத்தில், வரும், 23ம் தேதி முதல், 31ம் தேதி வரை, திருக்குறள் விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. மாணவ, மாணவியருக்கு திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி - வினா மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்படுகிறது.
போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசு, 5 ஆயிரம் ரூபாய், இரண்டாவது பரிசு, 3 ஆயிரம், மூன்றாவது பரிசு, 2 ஆயிரம் மற்றும் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர், மாவட்ட மைய நுாலகத்தில் நேரடியாகவோ அல்லது, 0421 - 2232618 என்கிற எண்ணில் தொடர்புகொண்டு வரும், 21ம் தேதிக்குள் பெயர் முன்பதிவு செய்யவேண்டும்.