/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நுாலகப் புத்தக வாசிப்பு ஊக்குவிக்க வேண்டும்'
/
'நுாலகப் புத்தக வாசிப்பு ஊக்குவிக்க வேண்டும்'
ADDED : ஜன 01, 2026 05:26 AM
திருப்பூர்: மாவட்ட கல்வி அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள், மாவட்ட கல்வி அலுவலர் காளிமுத்து முன்னிலை வகித்தனர்.
கல்வித்துறை சார்ந்த திட்டங்களை ஆய்வு செய்த கலெக்டர், ''கிராம நுாலகங்களில் உள்ள புத்தகங்களை, மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்; நுாலக புத்தக வாசிப்பை, பள்ளிகள் ஊக்குவிக்க வேண்டும்.
பள்ளி மேலாண்மை குழு வாயிலாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, மற்ற அரசுத்துறை வாயிலாக நிறைவேற்ற வேண்டும்.
ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து, மின் வாரியம், தபால்துறைகள் தேவையான உதவிகளை செய்ய வேண்டும்'' என அறிவுறுத்தினார்.

