/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டிரைவரை கொன்று கார் திருட்டு ஆசாமிக்கு ஆயுள் தண்டனை
/
டிரைவரை கொன்று கார் திருட்டு ஆசாமிக்கு ஆயுள் தண்டனை
டிரைவரை கொன்று கார் திருட்டு ஆசாமிக்கு ஆயுள் தண்டனை
டிரைவரை கொன்று கார் திருட்டு ஆசாமிக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஆக 02, 2025 11:27 PM

திருப்பூர்: தாராபுரம் அருகே தாளக்கரையைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன், 30. வாடகை கார் ஓட்டுநர். கடந்த 2015- செப்., 24ம் தேதி, கரூர் போக வேண்டும் எனக் கூறி ஒருவர் வாடகை பேசி அழைத்துச் சென்றார். அங்கிருந்து திண்டுக்கல் சென்று விட்டு மீண்டும் தாராபுரம் திரும்பினர்.
வரும் வழியில் இயற்கை உபாதையைக் கழிக்க, கன்னிவாடி அருகே காரை நிறுத்தினார். அப்போது காரில் பயணித்த நபர் ரோட்டோரம் கிடந்த இரும்பு பிளேட்டை பயன்படுத்தி ஜெகதீஸ்வரனைக் கொலை செய்து, அவரது கார் மற்றும் மொபைல் போனைத் திருடிச் சென்றார்.இதில் ஈடுபட்ட வடமதுரை திடீர் நகரைச் சேர்ந்த வீரபாபு, 36 என்பவரை மூலனுார் போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கு தாராபுரம், 3வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் மணிவண்ணன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், டிரைவரை கொலை செய்து காரை திருடி சென்ற வீரபாபுவுக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.