/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கனவு இல்லம்' பயனாளிகள் பட்டியல் தயாரிப்பு துவக்கம்
/
'கனவு இல்லம்' பயனாளிகள் பட்டியல் தயாரிப்பு துவக்கம்
'கனவு இல்லம்' பயனாளிகள் பட்டியல் தயாரிப்பு துவக்கம்
'கனவு இல்லம்' பயனாளிகள் பட்டியல் தயாரிப்பு துவக்கம்
ADDED : பிப் 17, 2025 11:37 PM
திருப்பூர்; வரும் நிதியாண்டில், கனவு இல்லம் திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாக, பயனாளிகளை தயார்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநில அரசின் கனவு இல்லம் திட்டத்தில், கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள், சொந்தமாக வீடு கட்ட, 3.50 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில், பயனாளிகளை தேர்வு செய்வது கடும் சவாலாக இருந்தது.
அதற்காக, பயனாளிகள் தேர்வு விதிமுறைகளை எளிமையாக்கி, பயனாளிகள் கண்டறியப்பட்டனர். விண்ணப்பித்த ஏராளமானவர்கள், முதல் ஆண்டில் பயன்பெற இயலவில்லை. நிதியாண்டு நிறைடைய இருப்பதால், அடுத்த ஆண்டு இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, விண்ணப்பித்து வீடு ஒதுக்கீடு கிடைக்காத பயனாளிகளை நேரில் சந்தித்து, அடுத்த ஆண்டு பயனாளிகளாக தேர்வு செய்ய கள ஆய்வு துவங்கியுள்ளது. பி.டி.ஓ., மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், கிராமங்களுக்கு சென்று, பயனாளிகளை சந்தித்து, வீடு கட்ட தயாராக இருக்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூறுகையில், 'வரும், 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது; வரும் நிதியாண்டில், டிச., மாதத்துக்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்படும். அதன்படி, கனவு இல்லம் திட்டத்தை முன்கூட்டியே துவக்க ஏதுவாக, பயனாளிகளை தயார்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுபட்ட நபர்களுக்கு முன்னுரிமை அளித்து, பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது,' என்றனர்.

