/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இலக்கிய திறனறிவு தேர்வு 8,292 மாணவர்கள் பங்கேற்பு
/
இலக்கிய திறனறிவு தேர்வு 8,292 மாணவர்கள் பங்கேற்பு
ADDED : அக் 19, 2024 11:46 PM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின், 26 மையங்களில் நேற்று நடந்த தமிழ்மொழி திறனறிவு தேர்வில், 352 மாணவர்கள் பங்கேற்கவில்லை.
தமிழ்மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில், தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு, தேர்வுகள் துறை இயக்ககத்தால், ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் பிளஸ் 1 மாணவருக்கு இரண்டு ஆண்டுகள், மாதம், 1,500 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர் மட்டுமல்லாது, தனியார் பள்ளி மாணவர்களும் இத்தேர்வில் பங்கேற்று, தமிழ்மொழியில் திறமை காட்ட வாய்ப்பு வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் இருந்து கொள்குறி வகையில் வினாக்கள் தேர்வில் கேட்கப்படும்.
தேர்வுக்கான அறிவிப்பு ஆக., மாதம் வெளியானது; செப்., 19 வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் தேர்வெழுத, 8,644 மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்தனர்.
நேற்று மாவட்டத்தின், 26 மையங்களில் தேர்வுகள் நடந்தது; 8,292 பேர் தேர்வில் பங்கேற்றனர்; 352 பேர் தேர்வெழுதவரவில்லை.