ADDED : பிப் 14, 2024 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பொது நுாலக இயக்ககம், திருப்பூர் மாவட்ட, நுாலக ஆணைக்குழு சார்பில், திருப்பூர் எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் இளைஞர் இலக்கிய திருவிழா நடந்தது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், ஆங்கில புத்தக பகுத்தாய்வு, பேச்சுப் போட்டி, டிஜிட்டல் டிசைன் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. உடனடி ைஹக்கூ கவிதை உருவாக்கும் கலை குறித்து, விக்னேஸ்வரா வித்யாலயா தமிழாசிரியர் ஆழ்வை கண்ணன், பேசினார்.
போட்டிக்கு நடுவராகவும் செயல்பட்டார்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு, கோவையில் நடைபெறவுள்ள சிறுவாணி இளைஞர் இலக்கிய திருவிழாவில், முதல் பரிசு, 5 ஆயிரம், இரண்டாம் பரிசு, 4 ஆயிரம், மூன்றாம் பரிசு, 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. 'பங்கேற்ற அனைவருக்கும், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்' எனவும் தெரிவிக்கப்பட்டது.

