/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்களை அச்சுறுத்தும் கால்நடை துறை கட்டடம்
/
மக்களை அச்சுறுத்தும் கால்நடை துறை கட்டடம்
ADDED : ஏப் 24, 2025 10:34 PM

உடுமலை,; முக்கோணத்தில், பயன்பாடு இல்லாமல் சமூக விரோத மையமாக மாறியுள்ள, கால்நடை கிளை நிலைய கட்டடத்தை அப்புறப்படுத்த, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதியில், கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில்,உடுமலை முக்கோணத்தில், தேசிய நெடுஞ்சாலையையொட்டி, கால்நடைத்துறையின் கால்நடை கிளை நிலையம் செயல்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன், இந்த நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது.
இதையடுத்து, பழைய கட்டடம் பயன்பாடு இல்லாமல் விடப்பட்டு, வளாகம் முழுவதும், புதர் மண்டி காணப்படுகிறது.இதனால், விஷஜந்துகள் தாராளமாக உலா வருகின்றன. அருகிலுள்ள வீடுகளுக்குள் அவை புகுந்து விடுகின்றன.
மேலும் அங்குஇரவு நேரங்களில், சமூக விரோத செயல்களும் நடைபெறுவதால், அருகிலுள்ள குடியிருப்பில் வசிப்பவர்கள் அச்சத்துடன் நடமாட வேண்டியுள்ளது.
எனவே, பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, புதர்களை அகற்ற வேண்டும். அவ்விடத்தை மாற்று பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, மக்கள் அச்சத்தை போக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

