/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீவன பற்றாக்குறை நீங்கியது கால்நடை விவசாயிகள் நிம்மதி
/
தீவன பற்றாக்குறை நீங்கியது கால்நடை விவசாயிகள் நிம்மதி
தீவன பற்றாக்குறை நீங்கியது கால்நடை விவசாயிகள் நிம்மதி
தீவன பற்றாக்குறை நீங்கியது கால்நடை விவசாயிகள் நிம்மதி
ADDED : அக் 21, 2024 04:02 AM
பொங்கலுார் : இந்த ஆண்டு மாவட்டத்தின் பல பகுதி களில் கோடை மழை போதுமான அளவு பெய்ய வில்லை. இதனால், மேய்ச்சல் நிலங்கள் கருகின. கால்நடைகளுக்கு கடுமையான தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டது.
இந்நிலையில், புரட்டாசி மாதம் பலத்த மழை பெய்தது. இதனால், இயற்கையாக வளரும் கோரை, கொழுக்கட்டை, அருகு போன்ற புல் வகை தாவரங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. இதுவரை தீவனப்பற்றாக்குறை காரணமாக கழிவுப்பஞ்சு, வைக்கோல் போன்றவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி கால்நடைகளை காப்பாற்றி வந்த விவசாயிகளுக்கு இது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
மேலும், புரட்டாசி பட்டத்தில் மானாவாரி நிலங்களில் சோளம், கம்பு, தட்டை போன்றவைகளை சாகுபடி செய்துள்ளனர். அடுத்தாண்டுக்கான தீவ னத் தேவையை சமாளிக்க இந்த மழை பேருதவியாக அமைந்துள்ளது. இதனால், கால்நடை விவசாயிகள் உற்சாகத்தில் உள்ளனர்.