/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கடன் வாங்கியவர் காரில் கடத்தல்; 4 பேர் கும்பல் கைது: கார் பறிமுதல்
/
கடன் வாங்கியவர் காரில் கடத்தல்; 4 பேர் கும்பல் கைது: கார் பறிமுதல்
கடன் வாங்கியவர் காரில் கடத்தல்; 4 பேர் கும்பல் கைது: கார் பறிமுதல்
கடன் வாங்கியவர் காரில் கடத்தல்; 4 பேர் கும்பல் கைது: கார் பறிமுதல்
ADDED : ஜூலை 19, 2025 12:15 AM

திருப்பூர்: நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை திரும்பச் செலுத்தாமல் தலைமறைவாக இருந்த நபரை, காரில் கடத்திச் சென்ற கும்பலை போலீசார் விரட்டிப் பிடித்தனர்.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் பிரகாஷ்,30. இவரது மனைவி சிவசங்கரி, 28. தம்பதிக்கு ஏழு வயது மகன், இரண்டு வயது மகள் உள்ளனர்.இரண்டாண்டுக்கு முன், பிரகாஷ் தென்காசிக்கு சென்றார். அங்கு அவரது நண்பர் விசு, 38 என்பவருடன் சேர்ந்து பிரின்டிங் மற்றும் ஸ்டிக்கர் தொழில் செய்தார். தன் நண்பர்கள் மற்றும் நிதி நிறுவனத்தில், 39 லட்சம் ரூபாய் கடன் பெற்று, ஆன்லைன் வர்த்தத்தில் முதலீடு செய்தார்.
ஆனால், எதிர்பார்த்த வருவாய் கிடைக்காமல் முதலீடு செய்த பணமும் பறி போனது. கடன் வாங்கியவர்களுக்கு பணத்தை திரும்ப தரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அவரின் நண்பர் விசு, பிரகாஷ் மீது கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. வழக்கு விசாரணைக்கும் அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார்.கடந்த சில மாதம் முன்னர் பிரகாைஷக் காணவில்லை என அவரின் மனைவி தென்காசி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு யெ்து அவரைத் தேடி வந்தனர். கடன் கொடுத்தவர்களும் அவரை பல இடங்களில் தேடி வந்தனர்.ஆனால், பிரகாஷ் தன் குடும்பத்துடன் காங்கயம் அருகே தலைமறைவாக இருந்துள்ளார். இத்தகவல் அறிந்து, காங்கயம் அருகே குதிரை பள்ளம் பகுதியில் அவர் வசித்த வீட்டுக்கு, விசு உள்ளிட்ட சிலர் வந்தனர். அவருடன் வாக்குவாதம் செய்து அவரை கட்டாயப்படுத்தி, காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டனர்.இது குறித்து சிவசங்கரி காங்கயம் போலீசுக்கு புகார் அளித்தார்.
போலீசார் உடனடியாக தாராபுரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதில், தாராபுரம் _ உடுமலை ரோட்டில் வந்த காரை தாராபுரம் போலீசார் மடக்கிப் பிடித்து, காரிலிருந்த பிரகாஷை போலீசார் மீட்டனர்.
இதில் ஈடுபட்ட தென்காசியைச் சேர்ந்த விசு, 38, நிதி நிறுவனத்தைச் சேர்ந்தபரமசிவம், 47, குமார், 45 மற்றும் மணிகண்டன், 29 ஆகியோரை போலீசார் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.