sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

லோக் அதாலத்: ரூ. 52 கோடிக்கு சமரசம்

/

லோக் அதாலத்: ரூ. 52 கோடிக்கு சமரசம்

லோக் அதாலத்: ரூ. 52 கோடிக்கு சமரசம்

லோக் அதாலத்: ரூ. 52 கோடிக்கு சமரசம்


ADDED : ஜூன் 15, 2025 04:05 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 04:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நடந்த லோக் அதாலத் நிகழ்வில், 3,614 வழக்குகளில் மொத்தம், 52 கோடி ரூபாய் மதிப்பில் சமரசம் ஏற்படுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று மாவட்டம் முழுவதும் லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்ற நிகழ்வு நடைபெற்றது. பல்வேறு வழக்குகள் இதில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளும் வகையில், முடிவுக்கு கொண்டு வந்து சமரசம் ஏற்படுத்தப்பட்டது. திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் இந்நிகழ்வை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குணசேகரன் துவக்கி வைத்தார். சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் மோகனவள்ளி முன்னிலை வகித்தார்.

மாவட்டம் முழுவதும் மொத்தம், 21 அமர்வுகளாக வழக்கு விசாரணைகள் நடைபெற்றது. இதில், வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் 458 விசாரிக்கப்பட்டு, 30 கோடி ரூபாய் மதிப்பில் தீர்வு காணப்பட்டது. சிவில் வழக்குகள் 107 விசாரித்து, அதில் 17 கோடி ரூபாய் மதிப்பில் தீர்வு ஏற்படுத்தப்பட்டது. குடும்ப நல வழக்குகள் ஐந்து விசாரித்து அதில், 8 லட்சம் ரூபாய்க்கு சமரசம் ஏற்படுத்தப்பட்டது. சிறு குற்ற வழக்குகள் 2,846 வழக்குகள் விசாரித்து, அதில் 1.77 கோடி ரூபாய் அளவில் தீர்வு ஏற்பட்டது.

காசோலை மோசடி வழக்குகள், 36 விசாரணைக்கு எடுத்து, 1.20 கோடி ரூபாய் மதிப்பில் முடித்து வைக்கப்பட்டது. வங்கி வராக்கடன் வழக்குகள் 162ல், 1.27 கோடி ரூபாய் சமரசம் ஏற்படுத்தப்பட்டது. அவ்வகையில் நேற்று நடந்த நிகழ்வுகளில், மொத்தம், 6,907 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. இதில், 3,614 வழக்குகளில் தீர்வு ஏற்படுத்தி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. மொத்தம், 520 கோடி ரூபாய் மதிப்பில் சமரசம் செய்து தீர்வு காணப்பட்டது.

இந்நிகழ்வில் நீதிபதிகள் பத்மா, பாலு, சுரேஷ், ஸ்ரீதர், செல்லதுரை, ஸ்ரீவித்யா, சுபஸ்ரீ, செந்தில்ராஜா, நதியா பாத்திமா, லோகநாதன், கிருத்திகா மற்றும் வக்கீல் சங்க நிர்வாகிகள், வக்கீல்கள் பங்கேற்றனர்.

---

திருப்பூரில் நடந்த லோக் அதாலத்தில் விபத்து இழப்பீடுக்கான உத்தரவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குணசேகரன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கினார்.

விபத்தில் மரணம்

ரூ.25 லட்சம் இழப்பீடுதிருப்பூர், இடுவாய் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 28. கட்டுமான தொழில் செய்து வந்தார். கடந்த, 2020 ஜூலை மாதம், பல்லடத்திலிருந்து, பொள்ளாச்சி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த சரக்கு லாரி மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது இறப்புக்கு இழப்பீடு கேட்டு, அவர் மனைவி ஜெயலட்சுமி, திருப்பூர் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கு நேற்று லோக் அதாலத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதில், 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனம் முன் வந்தது. அதற்கான காசோலையை ஜெயலட்சுமி மற்றும் குடும்பத்தாரிடம் நீதிபதி குணசேகரன் வழங்கினார். அவிநாசியில் லோக் அதாலத்அவிநாசியில் லோக் அதாலத், வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி செந்தில்குமார் தலைமையில், மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்மணி, நீதித்துறை நடுவர் விஜயலட்சுமி, ஓய்வு பெற்ற நீதிபதி ராமராஜ், வழக்கறிஞர்கள் இளங்கோவன், கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. மொத்தம் 716 வழக்குகளுக்கு சமரசமாக தீர்வுத்தொகை வழங்கப்பட்டது.மொத்தம் 4 கோடியே 74 லட்சத்து 46 ஆயிரத்து 678 ரூபாய் மதிப்பில் வழக்குகள் முடிக்கப்பட்டது. 776 பயனாளிகள் தீர்வுத்தொகை பெற்று பயனடைந்தனர்.---படம் உண்டு.








      Dinamalar
      Follow us