/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ராமேஸ்வரம் ரயிலுக்கு நீண்ட காத்திருப்பு : மதுரை கோட்டம் மீது அதிருப்தி
/
ராமேஸ்வரம் ரயிலுக்கு நீண்ட காத்திருப்பு : மதுரை கோட்டம் மீது அதிருப்தி
ராமேஸ்வரம் ரயிலுக்கு நீண்ட காத்திருப்பு : மதுரை கோட்டம் மீது அதிருப்தி
ராமேஸ்வரம் ரயிலுக்கு நீண்ட காத்திருப்பு : மதுரை கோட்டம் மீது அதிருப்தி
ADDED : செப் 01, 2025 07:17 PM
உடுமலை:
பாலக்காடு - ராமேஸ்வரம் ரயில் நிறுத்தப்பட்டு, 9 ஆண்டுகளாகிறது; அகல ரயில்பாதை, மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்றும், ரயில் இயக்கப்படாமல் இருப்பது வேதனையளிப்பதாக உடுமலை பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பாலக்காடு - ராமேஸ்வரம் ரயில், திண்டுக்கல் - பாலக்காடு மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு, நாள்தோறும் நுாற்றுக்கணக்கான பயணியர் பயன்பெற்று வந்தனர். கடந்த, 2009ல், திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதை பணிகள் துவங்கி, 2015ல், நிறைவு பெற்றது.
பின்னர், மின்மயமாக்கல் பணி நடந்தது. கடந்த, 2015ல், இருந்து மீட்டர் கேஜ் பாதையில் நீண்ட காலமாக இயக்கப்பட்டு வந்த ராமேஸ்வரம் ரயிலை மீண்டும் இயக்க, உடுமலை பகுதி பயணியர் பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த ரயிலை இயக்க, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தும், மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், 9 ஆண்டுகளாக, மக்கள் பிரதிநிதிகள் வாயிலாகவும், நேரடியாகவும், தொடர்ச்சியாக தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லாததால், வேதனையில் உள்ளனர்.
மதுரை கோட்ட ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் மோகனசுந்தரம் கூறுகையில், ''திரு வனந்தபுரம் - மதுரை எக்ஸ்பிரஸ் (அமிர்தா எக்ஸ்பிரஸ்) ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்கவும், பாலக்காடு - ராமேஸ்வரம் ரயிலை மீண்டும் இயக்கவும், ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து பல ஆண்டுகளாகிறது. ஆன்மிக தலங்களையும், பல்வேறு மாவட்டங்களையும் இணைக்கும் இந்த ரயிலை இயக்க வலியுறுத்தி, தெற்கு ரயில்வேக்கு தொடர்ச்சியாக மனு அனுப்பினோம்; மதுரை கோட்ட ஆலோசனை கூட்டங்களிலும் நேரடியாக வலியுறுத்தியும், ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை'' என்றார்.