/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'படிச்சு முடிச்ச பின்னாடி கட்சி வேலையப் பாருங்க'; காமராஜரின் அன்பும், கண்டிப்பும்
/
'படிச்சு முடிச்ச பின்னாடி கட்சி வேலையப் பாருங்க'; காமராஜரின் அன்பும், கண்டிப்பும்
'படிச்சு முடிச்ச பின்னாடி கட்சி வேலையப் பாருங்க'; காமராஜரின் அன்பும், கண்டிப்பும்
'படிச்சு முடிச்ச பின்னாடி கட்சி வேலையப் பாருங்க'; காமராஜரின் அன்பும், கண்டிப்பும்
ADDED : அக் 03, 2024 05:33 AM

நேற்று கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் மறைந்த தினம். தமிழக முதல்வராக காமராஜர் பதவி வகித்தது, 9 ஆண்டுகள் தான்; ஒரே நேரத்தில், 16 ஆயிரம் பள்ளிக்கூடங்களை திறந்தவர்; மதிய உணவு திட்டம் கொண்டு வந்தவர்; ஏராளமான அணைகளை கட்டியவர்... இப்படி குறுகிய காலத்தில் அவர் செய்த அரும்பெரும் சாதனைகள் ஏராளம்.காமராஜர் குறித்த நினைவலைகள் குறித்து, திருப்பூர் அடுத்த மங்கலம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் முத்துராமலிங்கம் நம்மிடம் பகிர்ந்தவை:
1974ல், திருப்பூர் சிக்கண்ணா கலைக்கல்லுாரி மாணவர் பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற காங்., கட்சி மாணவர்களுடன், காமராஜரை அவரது வீட்டில் சந்தித்தோம். தேர்தல் நோட்டீஸ்களை காட்டினோம். சில நொடிகளில் அவர் முகம் மாறியது. 'படிக்கிற காலத்துல எதுக்கு இத்தனை செலவு? படிச்சு முடிச்ச பின்னாடி, கட்சி வேலை செய்தால் போதும்; நன்றாக படியுங்கள்' என, அன்போடும், கண்டிப்போடும் ஒரு தகப்பனை போல் பேசி அனுப்பினார்.காமராஜர் பங்கேற்ற கடைசி அரசியல் மாநாடு பல்லடத்தில் நடந்தது. அப்போது திருப்பூர் வட்டார காங்., தலைவராக இருந்த நான், 4,250 ரூபாய் திரட்டி தேர்தல் நிதியாக வழங்கினேன். 1975, செப்., 30ம் தேதி மாணவர் காங்., தோழர்கள் துரைசாமி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன், காமராஜரை அவரது வீட்டில் சந்தித்தோம்.
நாங்கள் சந்தித்த, 52 மணி நேரத்தில், அவர் மறைந்தார். அவர் மறைவுக்கு முன், அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட நிகழ்வு, எனது நினைவுகளில் எப்போதும் நிலைத்திருக்கும்.