ADDED : ஏப் 25, 2025 08:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊதியூர் பகுதியில் சட்டவிரோதமாக கிராவல் மண், கற்கள் கடத்தப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், தாராபுரம் துணை தாசில்தார் தேன்மொழி தலைமையில் சங்கரண்டாபாளையம் நில வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ., உள்ளிட்ட குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
டிப்பர் லாரியில் முறையான அனுமதி சீட்டு ஏதுவும் இல்லாமல் கிராவல் மண் கொண்டு வந்த லாரியை வருவாய்த்துறை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். கிராவல் மண் உடன் லாரியை பறிமுதல் செய்து, லாரி உரிமையாளர், டிரைவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.