/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாடு வரத்து குறைவு; விற்பனையும் மந்தம்
/
மாடு வரத்து குறைவு; விற்பனையும் மந்தம்
ADDED : நவ 04, 2024 10:46 PM
திருப்பூர் ; தீபாவளி பண்டிகை நிறைவுக்கு பின் கூடிய கால்நடை சந்தைக்கு, மாடுகள் வரத்து குறைந்தது. முழுமையாக வியாபாரிகள் வந்து சேராததால், விற்பனையும் மந்தமாக இருந்தது.
திருப்பூர், கோவில்வழி - அமராவதிபாளையத்தில், வாரந்தோறும் திங்களன்று கால்நடை சந்தை நடக்கும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்து மாடுகளை வாங்க வியாபாரிகள் வருவர். கடந்த, 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதற்கு முந்தைய திங்கள், அக்., 28ம் தேதி கூடிய சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது. 2.10 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரம், 987 ஆக இருந்த கால்நடை வரத்து, நடப்பு வாரம், 796 ஆக குறைந்தது; 1.40 கோடி ரூபாய்க்கு மட்டும் வர்த்தகம் நடந்தது.
வரத்து குறைவால், கன்றுக்குட்டி விலை உயர்ந்து, 4,000 - 5,000 ரூபாய்க்கு விற்றது. பண்டிகை முடிந்து கூடிய சந்தை என்பதால், காளை, எருது விலை உயர்ந்த போதும், மாடுகள் விலை உயரவில்லை. நேற்றைய சந்தையில், கன்றுகுட்டி, 4,000 - 5,000 ரூபாய், காளை, 26 ஆயிரம் - 30 ஆயிரம், மாடுகள், 25 ஆயிரம் - 32 ஆயிரம், எருது, 30 ஆயிரம் - 32 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.