/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எல்.ஆர்.ஜி., கல்லுாரிக்கு கூடுதல் அந்தஸ்து
/
எல்.ஆர்.ஜி., கல்லுாரிக்கு கூடுதல் அந்தஸ்து
ADDED : பிப் 10, 2025 11:51 PM
திருப்பூர்; திருப்பூர் எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரிக்கு, 'பி டபுள் பிளஸ்' அந்தஸ்து கிடைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர், பல்லடம் ரோட்டில், எல்.ஆர்.ஜி., அரசு பெண்கள் கல்லுாரி செயல்படுகிறது. கடந்த 1971ல் துவங்கப்பட்ட கல்லுாரியில் இளங்கலை படிப்பில், 1,066 பேர், முதுகலையில், 251 பேர் என மொத்தம், 1,317 மாணவியர் படிக்கின்றனர். மாநிலத்தில் அதிக மாணவியர் படிக்கும் அரசுக் கலைக் கல்லுாரிகளில் இதுவும் ஒன்று.
கோவை, பாரதியார் பல்கலை கீழ் இயங்கும் இக்கல்லுாரிக்கு கூடுதல் அடிப்படை உள்கட்டமைப்பு வசதி பெற 'பி பிளஸ் பிளஸ்' அல்லது 'ஏ கிரேடு' அங்கீகாரம் கேட்டு, கல்லுாரி நிர்வாகம், யு.சி.ஜி.,க்கு விண்ணப்பித்தது. தேசிய தர நிர்ணயக்குழு கல்லுாரியில் கடந்த, ஜனவரியில் ஆய்வு நடத்தியது.
குழுவினர் ஆய்வு விபரங்களை, பெங்களூரு தேசிய தர மதிப்பீட்டு மன்றத்துக்கு அனுப்பி வைத்தனர். முடிவில் கல்லுாரிக்கு 'பி பிளஸ் பிளஸ்' அங்கீகாரம் வழங்க ஒப்புதல் கிடைத்துள்ளது. இதனால், கல்லுாரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவியர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.