/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எல்.ஆர்.ஜி., கல்லுாரி பட்டமளிப்பு; 35 பேர் பல்கலை அளவில் 'ரேங்க்'
/
எல்.ஆர்.ஜி., கல்லுாரி பட்டமளிப்பு; 35 பேர் பல்கலை அளவில் 'ரேங்க்'
எல்.ஆர்.ஜி., கல்லுாரி பட்டமளிப்பு; 35 பேர் பல்கலை அளவில் 'ரேங்க்'
எல்.ஆர்.ஜி., கல்லுாரி பட்டமளிப்பு; 35 பேர் பல்கலை அளவில் 'ரேங்க்'
ADDED : மார் 28, 2025 03:24 AM

திருப்பூர்: திருப்பூர், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில், 35 வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) தமிழ்மலர் வரவேற்றார். கடந்த, 2022 - 2023 ம் கல்வியாண்டு கல்லுாரியில் படித்த, 1,109 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. இளங்கலை பிரிவில், 918, முதுகலை படிப்பில், 191 மாணவியர் பட்டங்களை பெற்றனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, நிலக்கோட்டை, அரசு மகளிர் கலைக்கல்லுாரி முதல்வர் கீதா பேசியதாவது: உங்களிடம் இருந்து வாழ்நாள் முழுதும் பிரிக்க முடியாத, எடுக்க இயலாத, அழியாத, குறையாத, அள்ள அள்ள பெருகும் செல்வம் கல்வியே.
மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க கொடுக்க வளரும் செல்வம் கல்வியை தவிர வேரொன்றுமில்லை. வாழ்க்கையில் பிரச்னைகள் ஏற்படும் போது நீங்கள் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க உங்களுக்கு கல்வி உதவும்.
உங்களுக்கான வேலை வாய்ப்பை கல்வி தான் உருவாக்கித்தருகிறது. படிப்பை ஒரு போதும் நிறுத்தாதீர்கள். படிப்பின் அருமையை உயர்படிப்பு படிக்க படிக்கதான் நீங்கள் அனுபவித்து தெரிந்து கொள்வீர்கள்.
இன்று நீங்கள் படிக்கும் புத்தகம் தான் நாளை நீங்கள் அமரும் நாற்காலியை முடிவு செய்யும். நாம் கற்கும் நுால்களே, நம் அறிவின் எல்லையாக அமைகிறது. மாணவியர் தொழில் துவங்க முயற்சியுங்கள்; தொழில் முனைவோராகுங்கள். வெற்றி பெற்றால், பயிற்சி; தோல்வி அடைந்தால், முயற்சி. அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்வது வாழ்க்கை. எந்த சூழலிலும் தளராத தன்னம்பிக்கையுடன் பயணியுங்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.
ஆறுபேர் முதலிடம்
எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் படித்த மாணவியரில் மொத்தம், 1,109 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. இவர்களில், 35 பேர் பல்கலை அளவில் ரேங்க் பெற்றனர். ஆறு பேர், கோவை, பாரதியார் பல்கலை அளவில் முதலிடம் பெற்று, பாராட்டுக்களை பெற்றனர்.
அவர்கள் விபரம்: இளங்கலை பொருளியலில் மாணவி கற்பகா, தாவரவியலில் சோனா, மின்னணுவியலில் ரித்திகா, உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்தியல் பாடத்தில் ஜன்னத்பேகம், இயற்பியல் மற்றும் கணிணிப்பயன்பாடு பாடத்தில் மகேஸ்வரி, முதுகலை பொருளியலில் கிருத்திகா ஆகிய ஆறு மாணவியர் முதலிடம் பெற்றனர்.