/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இலவச பட்டா கேட்டு மா.கம்யூ. போராட்டம்
/
இலவச பட்டா கேட்டு மா.கம்யூ. போராட்டம்
ADDED : நவ 21, 2025 06:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: கோட்டமங்கலத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி, தாலுகா அலுவலகம் முன் மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு, கட்சியின் குடிமங்கலம் கமிட்டி உறுப்பினர் ரங்கநாதன் தலைமை வகித்தார். கோரிக்கைகள் குறித்து கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ், குடிமங்கலம் செயலாளர் சசிகலா, சி.ஐ.டி.யு., செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்டோர் பேசினர்.
கோட்டமங்கலம் கிராமத்தில் அரசு உபரி நிலத்தில், பட்டா கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும், உடனடியாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பின்னர், உடுமலை தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

