/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹாக்கியில் அசத்தல் வெற்றி; மாணவர்களுக்கு பாராட்டு
/
ஹாக்கியில் அசத்தல் வெற்றி; மாணவர்களுக்கு பாராட்டு
ஹாக்கியில் அசத்தல் வெற்றி; மாணவர்களுக்கு பாராட்டு
ஹாக்கியில் அசத்தல் வெற்றி; மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : நவ 21, 2025 06:13 AM

உடுமலை: மாநில அளவிலான ஹாக்கி போட்டிக்கு தேர்வு பெற்ற அணியினருக்கு, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், திருப்பூர் வருவாய் மாவட்ட அளவிலான குறுமைய போட்டிகள் நடந்தது.
ஹாக்கி போட்டியில், 19 மற்றும் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஹாக்கி அணி வெற்றி பெற்றது.
இந்த அணியினர் திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.
சிறப்பாக விளையாடிய மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் பாபு, உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரவேல் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் பாராட்டினர்.