/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடை மருத்துவ கல்லுாரியில் பயிற்சி முகாம்
/
கால்நடை மருத்துவ கல்லுாரியில் பயிற்சி முகாம்
ADDED : நவ 21, 2025 06:12 AM

உடுமலை: உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரியில், இறைச்சி மற்றும் இறைச்சி பொருட்களை பதப்படுத்தும் உதவியாளர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி உற்பத்தி பொருட்கள் தொழில்நுட்ப துறை சார்பில், இம்முகாம் நடந்தது.
கால்நடை உற்பத்தி மைய இயக்குனர் மீனாட்சிசுந்தரம், முகாமை துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் மணிவண்ணன் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட திறன் மேம்பாட்டு கழக உதவி இயக்குனர் ஜெயலட்சுமி பயிற்சி குறித்து பேசினார்.
இறைச்சி மற்றும் இறைச்சி பொருட்களை பதப்படும் உதவியாளர்களுக்கு, மொத்தமாக 25 நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ராஜராஜன் பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார்.

