/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகா கணபதி கோவில் விழா விளையாட்டு போட்டிகள்
/
மகா கணபதி கோவில் விழா விளையாட்டு போட்டிகள்
ADDED : ஆக 28, 2025 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி, ; அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள மகா கணபதி கோவில் நான்காம் ஆண்டு விழா, விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விளையாட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
மகா கணபதி பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. நான்காம் ஆண்டு விழாவை முன்னிட்டு குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என பலரும் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
இதில், மகா கணபதி கோவில் நிர்வாகம், மகாலட்சுமி நகர் மற்றும் வெள்ளியம்பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.