sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஸ்ரீ கொங்கு வடுகநாத சுவாமி கோவிலில் மஹா கும்பாபிேஷகம்

/

ஸ்ரீ கொங்கு வடுகநாத சுவாமி கோவிலில் மஹா கும்பாபிேஷகம்

ஸ்ரீ கொங்கு வடுகநாத சுவாமி கோவிலில் மஹா கும்பாபிேஷகம்

ஸ்ரீ கொங்கு வடுகநாத சுவாமி கோவிலில் மஹா கும்பாபிேஷகம்


ADDED : மார் 22, 2026 08:31 PM

Google News

ADDED : மார் 22, 2026 08:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் கரிவரதராஜ பெருமாள் கோவில், கொங்காலம்மன், சின்னம்மன் மற்றும் பரிவார தெய்வ சன்னதிகளில் திருப்பணிகள் முடிந்து, மஹா கும்பாபிேஷகம், 25ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.

காலை புதிய விக்ரஹங்களுக்கு கண் திறக்கும் பூஜை; கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. மதியம், மாமாங்கம் பர்வதவர்த்தினி உடனமர் ராமலிங்க சுவாமி கோவிலில் இருந்து, பக்தர்கள் தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து, மங்கள இசை, வாண வேடிக்கையுடன் கோவிலுக்கு ஊர்வலமாக பக்தர்கள் சென்றனர். மாலையில், யாகசாலை பூஜைகள் துவங்கின.

இன்று துவங்கி, 25ம் தேதி அதிகாலை வரை, தொடர்ந்து, காலவேள்வி பூஜைகள், யாகசாஜை பூஜைகள், திருமுறை விண்ணப்ப வழிபாட்டுடன் நடைபெற உள்ளது. வரும், 25ம் தேதி காலை, 6:00 மணி முதல, 7:00 மணிக்குள், கொங்காலம்மன், சின்னம்மன், அய்யப்ப சுவாமி விமானகலசம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபி ேஷகம் நடைபெற உள்ளது.

காலை, 9:00 முதல், 9:30 மணிக்குள், மூலாலய விமான கலசம், ராஜகோபுரம், பரிவார தெய்வங்களக்கு மஹா கும்பாபி ேஷகம் நடக்கிறது. காலை, 10:00 முதல், 10:30 மணிக்குள், கொங்கு வடுகநாத சுவாமி, ஸ்ரீசவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரருக்கு மஹா கும்பாபி ேஷகம் நடைபெற உள்ளது.

மாலை, 3:00 மணிக்கு மஹா அபி ேஷகம், அலங்காரபூஜை, தசதரிசனம், கோபூஜை, உபசார பூஜைகள், சுவாமி திருக்கல்யாண உற்சவம், சுவாமி திருவீதியுலா நடைபெறும். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 22ல் துவங்கி, 25ம் தேதி வரை அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கும்பாபி ேஷக விழாவை முன்னிட்டு, நேற்று மதியம், 'முளைப்பாரியின் முக்கியத்துவம்' என்ற ஆன்மிக சொற்பொழிவு, வள்ளி கும்மி ஆட்டம்; சோமனுார் ஊஞ்சப்பாளையம் குழுவினரின் காவடி ஆட்டம் நடந்தது. இன்று கொடுவாய் அழகுமயில் குழுவின் வள்ளி கும்மியாட்டம், 24 ம் தேதி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

விழா ஏற்பாடுகளை, அறங்காவலர்கள், திருப்பணி குழுவினர், செயல் அலுவலர் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us