sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 தொழில்முனைவராகும் மேஜிக்; எதிர்காலம் சிறக்கும் லாஜிக்

/

 தொழில்முனைவராகும் மேஜிக்; எதிர்காலம் சிறக்கும் லாஜிக்

 தொழில்முனைவராகும் மேஜிக்; எதிர்காலம் சிறக்கும் லாஜிக்

 தொழில்முனைவராகும் மேஜிக்; எதிர்காலம் சிறக்கும் லாஜிக்


ADDED : மார் 22, 2026 08:29 PM

Google News

ADDED : மார் 22, 2026 08:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:பொதிகை மனித வள மே ம்பாட்டு பயிற்சி மையம் மற்றும் நவ்வி கார்ப்பரேஷன் ஆகியன இணைந்து திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழில் நிறுவன தலைவர்களுக்கான தலைமைத்துவ மாநாட்டை திருப்பூரில் நடத்தின.

இதில் பங்கேற்ற வல்லுனர்கள் தெரிவித்த கருத்துகள்:

மதிப்பு கூடட்டும்

* ஆனந்த்:யூகங்கள் அடிப்படையில் இல்லாமல், முறையான தரவுகள் அடிப்படையில் முடிவு எடுப்பது வெ ற்றிக்கு வழிவகுக்கும். நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி டிரில்லியன் டாலரை எட்டுவதற்கு, சிறு மற்றும் குறு தொழில் வளர்ச்சி மிகவும் அவசியம். அளவு அடிப்படை யிலான ஆடை உற்பத்தி என்பதிலிருந்து 'மதிப்பு கூட்டிய ஆடை உற்பத்தி' என்று மாற வேண்டும். நிறுவன ஊழியர்களை புதிய தொழில் முனைவோர்களாக மாற்ற வேண்டும். தற்போது என்ன நடக்கிறது என்பதைக் காட்டிலும் அடுத்து என்ன நடக்க வேண்டும் என்ற சிந்தனையும் செயல்பாடும் மேம்பட வேண்டும். வேலையை முறையாக முடிப்பது; புதுமைகளை புகுத்துவது, ஒருங்கிணைப்பது, செயல்முறைகளை நிர்வகிப்பது ; தோல்வி கண்டு துவளாமல் அதை அனுபவமாக ஏற்று அடுத்த கட்டத்துக்கு நகர்வது அவசியம்.

செலவு குறையட்டும்


* வீரராகவன்: ஒரு நிறுவனத்தின் நிதித்துறையுடன் உற்பத்தி துறையும் இணைந்து செயல்பட வேண்டும். தவறுகளை துவக்கத்தில் கண்டறிந்து செலவைக் குறைக்க வேண்டும். மூலப் பொருள் கொள்முதல் விலையை மட்டும் கணக்கிடாமல் உற்பத்தி மற்றும் விற்பனை வரை அனைத்தையும் கணக்கிட வேண்டும். உரிய காலத்தில் லாப, நஷ்டம் கண்டறிய வேண்டும்.

சந்தையை ஆராயுங்கள்


* சிவராமகிருஷ்ணா: உற்பத்தி மற்றும் மூலப்பொளும் கொள்முதல் மட்டுமின்றி சந்தைப்படுத்துதல் வரை செலவுகள் கணக்கிட வேண்டும். லாபத்தின் சூத்திரத்தில், சந்தை நுண்ணறிவு மிக முக்கிய இடம் பிடிக்கிறது. தனி வாடிக்கையாளரை சார்ந்திருக்கும் நிலை கட்டாயம் தவிர்க்க வேண்டும். குறைந்த லாப ஆர்டர்களை தவிர்த்து நம் உற்பத்திக்கான உரிய விலை தரும் வாடிக்கையாளர் தான் தேவை. சந்தை சார்ந்த உற்பத்தியை விட சந்தையை ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

கண்ணியம் அவசியம்



* ராஜ் சாணக்கியா:தொழில் நிறுவனர்கள் முதலாளி என்பதை தவிர்த்து, தொழில் முறை நிபுணர்கள் என்று செயலாற்ற வேண்டும். ஒரு நிறுவனத்தின் மிகப் பெரிய முதலீடு கட்டடம், இயந்திரங்களைக் காட்டிலும் மனித வளம் மிகவும் முக்கியம். ஒரு திறமைசாலி இந்த நிறுவனத்தில் தான் சேர வேண்டும் என எண்ணி முயற்சிக்க வேண்டும். ஊழியர் மத்தியில் தவறுகளை பொருட்படுத்தாமல் அவர்கள் திறமையை வரவேற்க வேண்டும். உரிய பதவியில் உரிய நபர்களை அமர்த்த வேண்டும். அனைத்து ஊழியர்களும் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்.

நமக்கான வாய்ப்பு


*அர்ஜுன்:அமெரிக்க சந்தையில் வங்கதேசம், வியட்நாமை விட இந்தியாவுக்கு 11 முதல் 20 சதவீதம் வரை வரி குறைவு என்பது நமக்கான வாய்ப்பு. அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உற்பத்தியில் ஏற்படும் சில தவறுகள் கண்ணுக்குத் தெரியாத இழப்பை ஏற்படுத்தும். அதைக் கண்டறிந்து சரிப்படுத்த வேண்டும். மெஷின்கள் பயன்படுத்தாமல் இருப்பது மட்டுமில்லை; அதிகளவில் பயன்படுத்துவதும் லாபத்தை பாதிக்கும். நிறுவனர்களே அனைத்து முடிவுகளும் எடுப்பதும் தவறாகிவிடும்.

சமூகப்பொறுப்புகள்



* அருண் கிருஷ்ணன்: அதிக விலை என்பதால் ஆர்டர்கள் பறிபோகும் வாய்ப்பை விட, சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆளுகை விதிகளை பின்பற்றாததால் பறிபோவது அதிகரிக்கும். பல்வேறு உலக நாடுகள் தற்போது இதை கடுமையாகப் பின்பற்றுவது கவனிக்கப்பட வேண்டும். சமூக பொறுப்புகள் முறையாகப்பின்பற்ற வேண்டும். கண்துடைப்புக்கான போலி ஆவணங்கள் ஏற்படுத்துவது தவிர்க்கப்பட்டு, தவறுகள் சரி செய்யப்பட வேண்டும்.

மார்க்கெட்டிங் கவனம்

* குணசேகரன் ராஜு: தற்போதைய சூழலில் செயற்கை நுண்ணறிவு தொழில்துறையில் மிகப் பெரும் பங்கு வகிக்கிறது. அதை ஏற்புடைய வகையில் சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பல்வேறு பணிகளை இது மிகவும் எளிமையாக்குகிறது. மனித வளப் பயன்பாட்டை இது குறைக்காது. மாறாக உற்பத்தியை அதிகரிக்கும். நிறுவனர்கள் உற்பத்தி சார்ந்த கவலைகளை தள்ளி வைத்து விட்டு மார்க்கெட்டிங்கில் கவனம் செலுத்தலாம்.






      Dinamalar
      Follow us