/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவாலயங்களில் மஹா சிவராத்திரி வழிபாடு; நான்கு கால பூஜைகளுக்கு ஏற்பாடு
/
சிவாலயங்களில் மஹா சிவராத்திரி வழிபாடு; நான்கு கால பூஜைகளுக்கு ஏற்பாடு
சிவாலயங்களில் மஹா சிவராத்திரி வழிபாடு; நான்கு கால பூஜைகளுக்கு ஏற்பாடு
சிவாலயங்களில் மஹா சிவராத்திரி வழிபாடு; நான்கு கால பூஜைகளுக்கு ஏற்பாடு
ADDED : மார் 05, 2024 11:42 PM
திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, சிவன் கோவில்களில், நான்குகால பூஜைகளுடன், சிவராத்திரி வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி, மஹா சிவராத்திரி என்று வழிபடப்படுகிறது.
அந்நாளில், சிவாலயங்களில், மாலை, இரவு, நள்ளிரவு மற்றும் அதிகாலை என, நான்கு வேளையும், மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடத்தப்படுகிறது.
இந்தாண்டு, பிரதோஷத்துடன் கூடிய சிவராத்திரி என்பதால், மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து, இரவு, 7:30 மணி; இரவு, 10:30 மணி; நள்ளிரவு, 12:20 மணி மற்றும் அதிகாலை, 4:00 மணிக்கு, மூலவருக்கு மகா அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்க உள்ளது.
குறிப்பாக, நள்ளிரவு 12:20 மணிக்கு நடக்கும் பூஜையில், மூலவருடன், லிங்கோத்பவருக்கும் மகா அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்க உளளன. ஒவ்வொரு கால பூஜையின் போதும், ஆன்மிக அமைப்புகள் மற்றும் பக்தர்கள் சார்பில், பிரசாதம் வினியோகிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவிநாசிலிங்கேஸ்வரர் சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், நல்லுார் ஈஸ்வரன் கோவில், சாமளாபுரம் ஸ்ரீசோழீஸ்வரர் கோவில் என, அனைத்து சிவாலயங்களிலும் சிவராத்திரி விழா பூஜைகள் விமரிசையாக நடக்க உள்ளது.

