/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகாவீர் ஜெயந்தி விழா ஊர்வலம், பிரார்த்தனை
/
மகாவீர் ஜெயந்தி விழா ஊர்வலம், பிரார்த்தனை
ADDED : ஏப் 10, 2025 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, திருப்பூரில் உள்ள ஜெயின் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சபாபதிபுரம் மகாவீர் காலனியில் உள்ள ஸ்வேதாம்பர் ஜெயின் கோவிலில், நேற்று காலை, சிறப்பு அபிஷேகம் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
சபாபதி புரத்திலிருந்து முருகன் கோவில் வரை, மகாவீர் சுவாமி ஊர்வலம் சென்று திருப்பியது.
ஊர்வலம் சென்ற வழியெங்கும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த பிரார்த்தனையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

