/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகோகனி மரக்கன்றுகள் விளைநிலத்துக்கு மகத்துவம்
/
மகோகனி மரக்கன்றுகள் விளைநிலத்துக்கு மகத்துவம்
ADDED : டிச 21, 2024 06:30 AM

திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், பச்சாகவுண்டன்வலசு கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
வெற்றி அறக்கட்டளையின், மரம் வளர்க்கும் திட்டம், 10வது ஆண்டாக வெற்றியடைந்துள்ளது. 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டம், மூன்று லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்குடன் நடப்பு ஆண்டில் துவங்கியது. கடந்த மார்ச் மாதம் துவங்கிய பசுமை பயணம், ஓய்வின்றி பயணித்துக் கொண்டிருக்கிறது.
மூன்று லட்சம் என்ற இலக்கை தாண்டி, நேற்று வரை மூன்று லட்சத்து, 40 ஆயிரத்து, 286 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இலக்கை தாண்டினாலும் கூட, இந்தாண்டு மழை பெய்யும் வரை, மரக்கன்றுகள் நடும் பணியை தொடர, வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தினர் முடிவு செய்துள்ளனர்.
காங்கயம் சுற்றுப்பகுதிகளில் தொடர்ந்து மரக்கன்று நடும் பணி நடந்து வருகிறது. நேற்று, பச்சாகவுண்டன் வலசு கிராமத்தில், கோகுல் - நந்தினி ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில், 150 மகோகனி மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

