/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பராமரிப்பு இல்லாத சோலார் உலர் கலன்
/
பராமரிப்பு இல்லாத சோலார் உலர் கலன்
ADDED : ஏப் 16, 2025 11:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; கூட்டுறவு சங்கங்களில், கொப்பரை உற்பத்திக்காக அமைக்கப்பட்ட சோலார் உலர்கலன் பராமரிப்பின்றி உள்ளதால், விவசாயிகள் பாதிக்கின்றனர்.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. தேங்காயை கொப்பரையாக மதிப்பு கூட்டி விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இதற்கான பெரிய உலர்களங்கள் அமைக்க அதிக செலவாகிறது.
இதையடுத்து, கூட்டுறவுத்துறை சார்பில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், சோலார் உலர் கலன் அமைக்கப்பட்டது. இதில், மானுப்பட்டி உள்ளிட்ட இடங்களில், அமைக்கப்பட்ட உலர்கலன்கள் பராமரிப்பின்றி உள்ளன.
பராமரிப்பு இல்லாமல் உள்ள சோலார் உலர்கலன்களை புதுப்பிக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.