/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குண்டம் தேர்த்திருவிழா; தேரோட்ட பாதை பராமரிப்பு
/
குண்டம் தேர்த்திருவிழா; தேரோட்ட பாதை பராமரிப்பு
ADDED : மார் 31, 2025 11:43 PM

அனுப்பர்பாளையம்; கொண்டத்துக் காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தேர் வலம் வரும் பாதையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
பெருமாநல்லுாரில் உள்ள கொண்டத்து காளியம்மன் கோவிலில், குண்டம் தேர்த்திருவிழா நாளை (2ம் தேதி) மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும், 8ம் தேதி அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்குதல், நிகழ்ச்சியும், அன்று மாலை தேரோட்ட நிகழ்ச்சியும் நடக்கிறது. ரோரோட்டம் நிகழ்ச்சியில், விநாயகர் மற்றும் அம்மன் தேர் ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் இருந்து, புறப்பட்டு வீதியை சுற்றி மீண்டும் கோவில் வளாகத்தை சென்றடையும். தேர் செல்லும் வீதியில் கடந்த இரு தினங்களுக்கு முன் தார் ரோடு போடப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, தேர் செல்லும்போது, இடையூறு ஏற்படாத வகையில் ரோட்டோரத்தில் உள்ள மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது. இதுதவிர, முட்புதர்கள் அகற்றப்பட்டு, ரோடு சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

