/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடற்பயிற்சி பூங்காவில் பராமரிப்பு பணி துவக்கம்
/
உடற்பயிற்சி பூங்காவில் பராமரிப்பு பணி துவக்கம்
ADDED : பிப் 13, 2025 09:34 PM

உடுமலை,; போடிபட்டி அம்மா உடற்பயிற்சி பூங்காவில், தன்னார்வலர்கள் வாயிலாக பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
கிராமப்பகுதி இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் விளையாட்டு பயிற்சி பெறுவதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும் 'அம்மா' உடற்பயிற்சி பூங்கா துவக்கப்பட்டது. உடுமலை ஒன்றியத்தில் பெரியகோட்டை மற்றும் போடிபட்டியில் இந்த பூங்காக்கள் செயல்படுகின்றன.
அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பூங்காவை பராமரிக்க வேண்டும். குழந்தைகள் விளையாடுவதற்கு சறுக்கல், ஊஞ்சல், சீசா, மற்றும் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கான தளவாடங்களும் இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன. நடைபயிற்சி செய்வதற்கான இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது பெரும்பான்மையான கிராமங்களில் இந்த பூங்கா பராமரிப்பில்லாமல் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. போடிபட்டியில் ஊராட்சி நிர்வாகம், பூங்காவை பராமரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தன்னார்வலர்கள், ஸ்பான்சர்கள் மூலமாக முதற்கட்டமாக வண்ணம் பூசுவது, குழந்தைகள் விளையாடும் தளவாடங்களை பழுதுபார்த்து புதுப்பிக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
விரைவில் உடற்பயிற்சி மையத்தின் தளவாடங்களும், பழுது பார்க்கப்படும் என ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

