/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆண்டு விழா கொண்டாட நிதி ஒதுக்கீடு செய்யுங்க
/
ஆண்டு விழா கொண்டாட நிதி ஒதுக்கீடு செய்யுங்க
ADDED : பிப் 10, 2025 06:12 AM
உடுமலை : அரசுப்பள்ளிகளில், ஆண்டுவிழா கொண்டாடுவதற்கு விரைவில் நிதிஒதுக்கீடு செய்ய வேண்டுமென பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
கல்வியாண்டுதோறும் மாணவர்களின் தனித்திறன்களை ஊக்கப்படுத்தவும், அரசு பள்ளிகளின் பல்வேறு சிறப்புகளை பெற்றோரிடம் கொண்டு சேர்க்கவும், ஆண்டுவிழா கொண்டாடப்படுகிறது.
முன்பு மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளுக்கு மட்டுமே, ஆண்டுவிழா கொண்டாடுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அனைத்து அரசுப்பள்ளிகளிலும் இவ்விழா கொண்டாட வேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடுவதற்கும், அதற்கான நிதி ஒதுக்கீடு மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் வழங்கப்படும் எனவும் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
ஆண்டு விழாவை குறிப்பிட்ட நாட்களுக்குள் நடத்துவதற்கு உத்தரவிட்டிருப்பதால், பள்ளி நிர்வாகத்தினர் குழப்பத்தில் உள்ளனர்.
அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'ஆண்டு விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், தனித்திறன்கள் வெளிப்படுத்த வேண்டும். அதற்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். வழக்கமாக, ஆண்டு விழாக்கள் கல்வியாண்டின் இறுதி மாதத்தில் அல்லது பாடங்கள் அனைத்தும் முடித்த பின் நடத்தப்படும். தற்போது அவசர நிலையில் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு விரைவில் நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும்' என்றனர்.

