/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறுமியிடம் சில்மிஷம் 'போக்சோவில்' ஒருவர் கைது
/
சிறுமியிடம் சில்மிஷம் 'போக்சோவில்' ஒருவர் கைது
ADDED : மே 22, 2025 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; ரயில்வே ஸ்டேஷனில், 12 வயது சிறுமி அழுது கொண்டிருந்தார். ரயில்வே போலீசார் குழந்தைகள் நலக்குழு சிறுமியை மீட்டு விசாரித்தனர்.
அதில், ரயில்வே பிளாட்பாரத்தில் உள்ள கடை ஒன்றில் பணியாற்றும் ராயபுரத்தை சேர்ந்த அனுஜ், 22 என்பவர் பாலியல் ரீதியாக அத்துமீறியது தெரிந்தது. குழந்தைகள் நலக்குழு புகாரின் பேரில் ரயில்வே போலீசார் அனுஜை 'போக்சோ' வில் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை தற்போது கொங்கு நகர் மகளிர் போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.