/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண்ணை அரிவாளால் வெட்டிய ஆசாமி கைது
/
பெண்ணை அரிவாளால் வெட்டிய ஆசாமி கைது
ADDED : ஜூலை 10, 2025 11:28 PM
திருப்பூர்; திருப்பூரில் பெண்ணை அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பத்மா, 37. இவர் திருணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். திருக்குமரன் நகரை சேர்ந்தவர் முருகன், 42. இவரும் திருமணமாகி, மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு பழகி வந்தனர்.
பத்மாவின் சித்தி முறையிலான உறவினர் ராம்லட்சுமி, 48 என்பவர், இவர்களின் பழக்கத்துக்கு இடையூறாக இருந்தார். இதன் காரணமாக, பத்மாவை தன்னிடம் இருந்து பிரித்து விடுவார் என்று நினைத்த முருகன், ராம்லட்சுமியை கண்காணித்து வந்தார்.
இதனையடுத்து, நேற்று முன்தினம் புதுார் பிரிவு அருகே உள்ள பனியன் நிறுவனத்துக்கு வழக்கம் போல், வேலைக்கு ராம்லட்சுமி நடந்து சென்றார். அப்போது டூவீலரில் பின் தொடர்ந்து சென்ற முருகன், ராம்லட்சுமியை அரிவாளால் சராமரியாக வெட்டி விட்டு தப்பி சென்றார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த நல்லுார் போலீசார், தப்பி சென்ற முருகனை கைது செய்தனர்.

