/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாய்க்காலில் தேங்கிய கழிவுநீரில் விழுந்தவர் பலி
/
வாய்க்காலில் தேங்கிய கழிவுநீரில் விழுந்தவர் பலி
ADDED : ஜன 12, 2025 02:10 AM
திருப்பூர்: திருப்பூர், வீரபாண்டி - பலவஞ்சிபாளையம் பகுதியில் பி.ஏ.பி., வாய்க்கால் கடந்து செல்கிறது. நீண்ட காலம் முன்னர் அமைக்கப்பட்ட இந்த வாய்க்காலில் தற்போது பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவதில்லை. இந்த வாய்க்கால் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு அதன் சுவடே வெளியே தெரியாமல் உள்ளது.
பலவஞ்சிபாளையம் ரோடு பகுதியில் உள்ள இந்த வாய்க்காலில் தற்போது கழிவு நீர் தேங்கி நிற்கிறது. நேற்று பகல் 2:00 மணியளவில் அந்த வாய்க்கால் கரையோரம் நடந்து சென்ற ஒருவர், வாய்க்காலினுள் தவறி விழுந்து இறந்தார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
அப்பகுதியினர் கூறுகையில், 'வாய்க்காலின் பாதைகள் ஆக்கிரமிப்பு காரணமாக மேற்கொண்டு இதில் நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. மேலும், இதில் பாலிதீன் உள்ளிட்ட குப்பைக்கழிவுகளும் தேங்கி நிற்கிறது. தற்போது இதில்உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. வாய்க்காலை முறையாகப் பராமரிக்க வேண்டும்,' என்றனர்.

