ADDED : ஆக 23, 2026 05:01 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: வேலம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனியாண்டி, 40; லாரி டிரைவர்; நேற்று மாலை திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து புஷ்பா ஸ்டாப் நோக்கி லாரியில் சென்றார். அப்போது, டூவீலரில் வந்த 3 பேர் மீது லாரி லேசாக உரசியதாக தெரிகிறது.
டூவீலரில் வந்தவர்கள் லாரியை பின்தொடர்ந்து மில்லர் பஸ் ஸ்டாப்பில் மறித்தனர். பின்னால் அமர்ந்திருந்தவர், டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தினார். காயமடைந்த பழனியாண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக விஜயமங்கலத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார், 30, என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
