/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாலையம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
/
மாலையம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
ADDED : டிச 26, 2024 10:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை ; உடுமலை எம்.பி.,நகர் ஸ்ரீ மாலையம்மன் கோவில் மகா கும்பாபிேஷக மண்டல பூஜை நிறைவு விழா மற்றும் அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
உடுமலை, தங்கம்மாள் ஓடை வீதி, எம்.பி.,நகரில், ஸ்ரீ மாலையம்மன் மற்றும் வெற்றி விநாயகர், வேட்டை கருப்பராயர், கன்னிமார் சுவாமி கோவில்கள் உள்ளன. இக்கோவில் கும்பாபிேஷகம், கடந்த, நவ., 8ம் தேதி நடந்தது.
தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. தினமும், அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தது. நேற்று மண்டல பூஜை நிறைவு விழாவில், அம்மனுக்கு பல்வேறு திரவியங்களில் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, மாலையில், அம்மன் திருக்கல்யாண உற்சவமும், அம்மன் திருவீதி உலாவும் நடந்தது.