/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா
/
ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா
ADDED : நவ 23, 2024 05:33 AM
அவிநாசி : அவிநாசி, சேவூரிலுள்ள ஸ்ரீ பாலசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு, 21ம் தேதி முதல் மண்டல பூஜை விழா துவங்கியுள்ளது. இதற்காக, தினந்தோறும் மாலை 6:00 மணி முதல் 6:45 மணி வரை ஐயப்ப சுவாமி மஹா அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து 7:15 மணி வரை மஹா அலங்காரமும், மஹா தீபாராதனையும் நடைபெறும். கும்பாபிஷேக மண்டல பூஜை விழா, வரும் டிசம்பர் 14ம் தேதி வரை, 24 நாட்கள் நடைபெறுகின்றது. மண்டல பூஜையில் பங்கேற்க விருப்பம் உள்ள பக்தர்கள் ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட் நிர்வாகிகளிடம் பதிவு செய்து கொள்ளலாம் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். மண்டல பூஜை விழாவை முன்னிட்டு, தினமும் இரவு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.