/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹிந்து முன்னணி சார்பில் மங்கள வேல் வழிபாடு
/
ஹிந்து முன்னணி சார்பில் மங்கள வேல் வழிபாடு
ADDED : நவ 07, 2025 12:18 AM

பல்லடம்: திருப்பூர் மாநகர் தெற்கு ஒன்றிய ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், பல்லடம் அருகே, மாதேஸ்வரன் நகர் பகுதியில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.
வேல் மற்றும் முருகப்பெருமான், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஹிந்து முன்னணி மாநில செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் குரு முன்னிலை வகித்தனர். முன்னதாக, வேல் வழிபாட்டில் பங்கேற்ற பெண்கள், வேலுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஹிந்து முன்னணி ஒன்றிய பொதுசெயலாளர் துளசிராமன், துணைத் தலைவர்கள் சுரேஷ், ரகு மற்றும் ஹிந்து அன்னையர் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

