/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலாளி கொலை; 5 பேருக்கு ஆயுள் சிறை
/
தொழிலாளி கொலை; 5 பேருக்கு ஆயுள் சிறை
ADDED : நவ 07, 2025 12:18 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார் வாஷிங்டன் நகரை சேர்ந்தவர், பாபுராஜா, 42. கூலித் தொழிலாளி. கடந்த, 2021 செப். 27ம் தேதி பெருமாநல்லுாரில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தியுள்ளனர். அப்போது, பணம் கொடுக்காமல் மது கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில், அவருக்கும், பார் ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட, பார் உரிமையாளர், சிவகங்கை - காளையார் கோவிலைச் சேர்ந்த கண்ணப்பன், 39; பார் ஊழியர்கள் ராமச்சந்திரன், 53, உதயசந்துரு, 23, ரஞ்சித், 23, முனியசாமி, 29 ஆகியோர் இணைந்து, பாபுராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த பாபுராஜ், தன் வீடு சென்று சேர்ந்த நிலையில் இறந்தார்.பெருமாநல்லுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பார் உரிமையாளர் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு விசாரணை திருப்பூர், 2வது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று இதில், நீதிபதி ஸ்ரீதர், 5 பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் பூமதி ஆஜரானார்.

