/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மங்கலம் கதிரவன் பள்ளி மாணவர்கள் அபாரம்
/
மங்கலம் கதிரவன் பள்ளி மாணவர்கள் அபாரம்
ADDED : ஆக 31, 2025 04:47 AM

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட குறுமைய விளையாட்டுப்போட்டிகளில் மங்கலம் கதிரவன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
செஸ் போட்டியில் இளையோர் பிரிவில் இப்பள்ளி மாணவர் முபிதா 3ம் இடம், கேரம் போட்டியில் நிஷாந்த் மற்றும் ரித்திக் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றனர்.
சிலம்பம் போட்டியில் இளையோர் பிரிவில் ஹரிணி மற்றும் ஹரிஹரன் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றனர். பிரபு சங்கர் மற்றும் வைஷ்ணவி வெண்கலம் வென்றனர். எறிபந்து போட்டி, 19 வயதினர் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றனர்.
இவர்கள் அனைவரும் மாவட்ட போட்டிகளில் பங்கேற்பர். 17 வயதினர் 400மீ., தொடர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் லக்ஷன், ஹர்ஷவர்தன், விஷூ, சரத் மூன்றாம் இடம்; நீளம் தாண்டுதலில் நித்திஷ், உயரம் தாண்டுதலில் சந்தீப் ரோஷன், 100மீ, 200மீ ஓட்டத்தில் லக்ஷன் 3ம் இடம் பெற்றனர்.
பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள், இவர் களைப் பாராட்டினர்.

